முகப்பு

என்ன தான் நடக்குது …

 

நாம் பிறந்து விட்டோம் இந்தப் பூமியில். அதற்கு என்ன என்கிறீர்களா?

நாம் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் அல்லவா? அது முக்கியம் தானா என்கிறீர்களா?

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் எத்தனையோ செய்ய நினைக்கிறோம்.

அவற்றைச் செய்து முடிக்க முடியாதவாறு பல முட்டுக்கட்டைகள்! முட்டுக்கட்டைகள் நிறைந்தது தானே வாழ்க்கை.

அந்த வாழ்வை நாம் எப்படி வளப்படுத்தலாம் என்று சேர்ந்து தான் சிந்திப்போமே!

 

என்னைப் பற்றி …

 

ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் கடந்த 18 ஆண்டுகளாக இங்கு இலண்டனில் வாழ்கிறேன்.

என்னைப் பற்றிச் சொல்வதானால் என்னை `நிலா` என்றே நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆம்! என்னைப் பெற்றவர்கள் எனக்கு இரண்டு பெயர்கள் இட்டிருக்கும் போது இடையில் நானே எனக்கிட்ட பெயர் தான் நிலா.

அது எல்லாம் பெரிய கதை. அதைச் சொல்லத்தான் இந்தத் தளம்.

என் வாழ்வு உண்மையில் சுவாரசியமானது. ஆனால் அதைக் கடப்பது தான் சிரமமானது.

என் கதையைக் கேட்க சுவையாக இருக்கும். ஆனால் அனுபவிப்பது நானல்லவோ.

ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் வாழும் அனுபவமானது வித்தியாசமானதே.

அந்த அனுபவங்களை எல்லோருடனும் பகிர்வது மனதுக்கு இதமானதே.

ஏதும் புதினம் உண்டா?? ..

நாளும் நாம் பலவற்றைக் கற்றுக் கொள்கிறோம். 

என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு பல கோணத்திலும் சிந்திக்க வேண்டியது.

இந்தத் தளம் அந்தப் புரிதலை ஒரு சிலருக்குக் கொடுக்கும் என்றால் கூட அது எனக்குப் பெரு வெற்றி தான்.

இல்லையில்லை என்னைப் போல் சவால்களைச் சந்திப்பவர்களுக்கு ஒரு திறவுகோல் தான்.

ஒன்றை மட்டும் மனதில் நிறுத்தி அடுத்த பக்கங்களுக்கு உங்கள் பார்வையைச் செலுத்தத் தயாராய் இருங்கள்.

ஒருவரது அனுதாபமும் எமக்கு வேண்டாம். 

ஊக்குவியுங்கள். நீங்களும் வளர்ந்து எங்களைப் போன்றவர்களையும் வளர வழி வகுத்துக் கொள்ளுங்கள்.

காலம் வெகு வேகமாகப் பறக்கிறது. அதற்குத் தொழில் நுட்பமும் கைகொடுக்கிறது.

அந்தத் தொழில்நுட்பம் எங்கள் போன்றவர்களின் வாழ்வைச் சுலபப்படுத்தட்டுமே!